வாங்கும் ஐடியா இருந்தால் கொஞ்சம் பொறுங்கள் ..
அடுத்த மாதம் புதிய ஸ்கூட்டி ஸெஸ்ட் அறிமுகமாக போகிறது ..
1993ம் ஆண்டு அறிமுகம் ஆன tvs scooty முதல் பெண்களின் வாகனம் ..
அதன்பின் வந்த scooty es, scooty pep, scooty pep plus , scooty teenz , scooty streak .. என் அனைத்தும் அட்ரா சக்கை ரகம்தான் ..
சுமார் 20 வருடங்கள் கழித்து இப்போது புத்தம்புதிய ஸ்கூட்டி ஸெஸ்ட் அறிமுகம் ஆகிறது .....
வண்டி எப்படி ? பார்ப்போம் ...
பார்த்தவுடன் கொழுக் மொழுக் என பிடித்து போகிறது புதிய ஸெஸ்ட் ....
ஹெட்லைட் டிசைன் பழசுதான் .. ஆனால் பாடி முழுவதும் வளைவு நெளிவுகள் புதிய டிசைன் பார்வைக்கு அழகான உள்ளது ....
முதன்முறையாக கார்களில் இருப்பது போன்று இதன் ஸ்பீடோ மீட்டர் டயல்கள் baklit மஞ்சள் நிறத்தில் அழகாக ஒளிர்கிறது ..
மேலும் tvs ன் டிரேட்மார்க் ஈக்கோ , பவர்மோட் உள்ளன ..
இதன் இரட்டை தையல் வேலைப்பாடுகள் கொண்ட ஸீட் பருமனான பெண்களும் வசதியாக அமர்ந்து ஓட்ட முடியும்.
பின்பக்கம் உள்ள led டெய்ல் லைட் பார்க்க அழகாக , கவர்ச்சியாக உள்ளது .
ஸீட்டுக்கு அடியில் 19 லிட்டர் கொள்ளளவு இடவசதி உள்ளது .. இது ஆக்டிவாவை விட அதிகம்..
ஆனால் முன்பக்கம் மூடும் வசதி கொண்ட க்ளோவ் பாக்ஸ் இல்லை ..
மேலும் 5 வித வண்ணங்களில் கிடைக்கிறது ..
இஞ்சின்
வீகோ, மற்றும் ஜூபிடரில் உள்ள அதே110 சிசி இஞ்சின்தான் இதிலும் உள்ளது .
ஆனால் அதைவிட ஸெஸ்ட் எடை குறைவு என்பதால் மைலேஜ் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ..
பட்டன் மற்றும் கிக் ஸ்டார்ட் எஞ்சின். 7500 rpm ல். .7.9bhp. பவர் தருகிறது ..
இதனால் வண்டி செம்ம பவராக இருக்கும் .. மேலும் இது 5500 rpm ல் 0.89kgm டார்க் கிடைக்கிறது ... இதனால் 0- 60 கி. மீ யை வெறும் 11.1 வினாடிகளில் கடக்கிறது ..அதிகபட்ச வேகம் 90 கிமீ ...
இதில் ஆட்டோ சோக் இருப்பதால் ஸ்டார்ட்டிங் பிரச்சினை இருக்காது ..
இதன் முன்பக்கம் டெலஸ்கோபிக் மற்றும் பின் பக்கம் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் ஓட்டுவதற்கு சொகுசாக உள்ளது ..
முன் , பின் இரு பக்கமும் டியூப்லெஸ் டயர் உள்ளது ...
இந்த டயர் ஓட்டுவதற்கு மிகவும் குறிப்பாக உள்ளது ...
மேலும் பிரேக்கிங் லாக் உள்ளதால் இறக்கத்தில் கூட வண்டியை நிறுத்தி வைக்கலாம் ...
சென்டர் ஸ்டாண்டு மிகவும் எளிதாக போடும் வகையில் வடிவமைத்துள்ளனர் ...
சைடு ஸ்டாண்டு அலாரம் உள்ளது ...
புளோர்மேட் வண்டயுடனேயே வருகிறது ...
மைலேஜ் 55 வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ..
நம்பி வாங்க நல்ல ஸ்கூட்டர் ...