Monday, September 1, 2014

ஸ்கூட்டி வாங்க போரீங்களா..?? ஒரு நிமிஷம்....

நீங்கள் இந்த வருடம் ஸ்கூட்டி
வாங்கும் ஐடியா இருந்தால் கொஞ்சம் பொறுங்கள் ..
அடுத்த மாதம் புதிய ஸ்கூட்டி ஸெஸ்ட் அறிமுகமாக போகிறது ..


1993ம் ஆண்டு அறிமுகம் ஆன tvs scooty முதல் பெண்களின் வாகனம் ..
அதன்பின் வந்த scooty es, scooty pep, scooty pep plus , scooty teenz , scooty streak .. என் அனைத்தும் அட்ரா சக்கை ரகம்தான் ..



சுமார் 20 வருடங்கள் கழித்து இப்போது புத்தம்புதிய ஸ்கூட்டி ஸெஸ்ட் அறிமுகம் ஆகிறது .....

வண்டி எப்படி ? பார்ப்போம் ...
பார்த்தவுடன் கொழுக் மொழுக் என பிடித்து போகிறது புதிய ஸெஸ்ட் ....
ஹெட்லைட் டிசைன் பழசுதான் .. ஆனால் பாடி முழுவதும் வளைவு நெளிவுகள் புதிய டிசைன் பார்வைக்கு அழகான உள்ளது ....
முதன்முறையாக கார்களில் இருப்பது போன்று இதன் ஸ்பீடோ மீட்டர் டயல்கள் baklit மஞ்சள் நிறத்தில் அழகாக ஒளிர்கிறது ..
மேலும் tvs ன் டிரேட்மார்க் ஈக்கோ , பவர்மோட் உள்ளன ..
இதன் இரட்டை தையல் வேலைப்பாடுகள் கொண்ட ஸீட் பருமனான பெண்களும் வசதியாக அமர்ந்து ஓட்ட முடியும். 
பின்பக்கம் உள்ள led டெய்ல் லைட் பார்க்க அழகாக , கவர்ச்சியாக உள்ளது .
ஸீட்டுக்கு அடியில் 19 லிட்டர் கொள்ளளவு இடவசதி உள்ளது .. இது ஆக்டிவாவை விட அதிகம்..
ஆனால் முன்பக்கம் மூடும் வசதி கொண்ட க்ளோவ் பாக்ஸ் இல்லை ..
மேலும் 5 வித வண்ணங்களில் கிடைக்கிறது ..
இஞ்சின் 


வீகோ, மற்றும் ஜூபிடரில் உள்ள அதே110 சிசி இஞ்சின்தான் இதிலும் உள்ளது .
ஆனால் அதைவிட ஸெஸ்ட் எடை குறைவு என்பதால் மைலேஜ் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ..
பட்டன் மற்றும் கிக் ஸ்டார்ட் எஞ்சின். 7500 rpm ல். .7.9bhp. பவர் தருகிறது ..
இதனால் வண்டி செம்ம பவராக இருக்கும் .. மேலும் இது 5500 rpm ல் 0.89kgm டார்க் கிடைக்கிறது ... இதனால் 0- 60 கி. மீ யை வெறும் 11.1 வினாடிகளில் கடக்கிறது ..அதிகபட்ச வேகம் 90 கிமீ ...
இதில் ஆட்டோ சோக் இருப்பதால் ஸ்டார்ட்டிங் பிரச்சினை இருக்காது ..
இதன் முன்பக்கம் டெலஸ்கோபிக் மற்றும் பின் பக்கம் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் ஓட்டுவதற்கு சொகுசாக உள்ளது ..
முன் , பின் இரு பக்கமும் டியூப்லெஸ் டயர் உள்ளது ...
இந்த டயர் ஓட்டுவதற்கு மிகவும் குறிப்பாக உள்ளது ...
மேலும் பிரேக்கிங் லாக் உள்ளதால் இறக்கத்தில் கூட வண்டியை நிறுத்தி வைக்கலாம் ...
சென்டர் ஸ்டாண்டு மிகவும் எளிதாக போடும் வகையில் வடிவமைத்துள்ளனர் ...
சைடு ஸ்டாண்டு அலாரம் உள்ளது ...
புளோர்மேட் வண்டயுடனேயே வருகிறது ...
மைலேஜ் 55 வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ..
நம்பி வாங்க நல்ல ஸ்கூட்டர் ...


Sunday, August 31, 2014

முதல் நாள் மாணவன்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் முதல் வணக்கம் ..
வலை பூவில் நான் இன்று முதன் முதலாக நுழைகிறேன், ஒரு பள்ளிக்கு முதல்நாள் செல்லும் மாணவனை போல் உணர்கிறேன்  ....மேலும் பதிவுலகில்  உள்ள அனைத்து seniorகளும் ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் ..
நான் வலை பூ ஆரம்பிக்க முதல் காரணம் .,
நமது தமிழ் மட்டும் தெரிந்த வாசகர்கள் ஏதாவது வாகனம் வாங்க ,அதை பற்றி இணயத்தில் தேடினால் அனைத்து செய்திகளும் ஆங்கிலத்தில் உள்ளன ..
எனவே எனக்கு தெரிந்த இரு சக்கர வாகன செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் ..

முதலில் என் நண்பருக்கு சென்ற மாதம் hero CD deluxe வாங்க சென்றபோது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் ....


சென்ற மாதம் என் நண்பர் தன்னிடம் இருந்த பழைய passion  proவை விட்டுவிட்டு புதிய hero CD deluxe எடுக்க என்னையும் அழைத்து சென்றார் ..
முதலில் நாங்கள் நாதமுனியில்  உள்ள முகவரிடம்  சென்றோம் ..
முதல் பார்வயிலேயே showroom ஏதோ பழங்கால உணர்வை தந்தது...
கீழ்தளத்தல் service centerம் , முதல் தளத்தில் விற்பனையகமும் இருந்தன ..
அங்கு கடமைக்கு இரண்டு , மூன்று வாகனங்கள் நின்றன ..
வரவேற்பறை என்று ஒன்று அங்கே இல்லவே இல்லை ..
ஒரு பெண் மட்டுமே அங்கே அமர்ந்து இருந்தார் , அவரிடம் சென்று hero CD deluxe பார்க்க வேண்டும் என்று சொன்னோம் . அதற்கு அந்த பெண் book பன்னுங்க சார் எடுத்துகலாம் என்று முகத்தை பார்க்கமலேயே சொன்னார்.
நாங்கள் வண்டி பார்த்துதான் எடுக்க வேண்டும் என்று சொன்னோம் ..
அதற்கு அந்த பெண் வண்டி stock இல்ல சார் , book பண்ணா பார்க்கலாம் என்று இந்த முறையும் முகத்தை பார்காமலேயே சொன்னார் ..
இதற்கு மேலே இங்கு இருந்தால் நமக்கு நல்லது இல்லை என்று கிளம்பினோம்..

அடுத்து புரசைவாக்கம் பகுதியில் உள்ள விற்பனையகம் சென்றோம் ..
வண்டியை நிறுத்திவிட்டு உள்ளேசென்றொம்.. இடம் நல்ல விலாசமாக இருந்ததுடன் நல்ல வரவேற்பும் கிடைத்தது .. இங்கும் ஒரு பெண்தான் எங்களை அணுகினார்.

CD deluxe பார்க்கவேண்டும் என்றோம்  ..
காட்சிக்கு வைத்து இருந்த வண்டியை காட்டினார் ..அங்கு இருந்தது CD deluxe eco மாடல் ..
வலை மற்றும் அதில் உள்ள சிறப்பம்சங்களை பற்றி தெளிவாக கூறினார்..
மிகவும் திருப்தியான இருந்தது..

book செய்தோம்.. நான்கு நாட்களில் பதிவு செய்து வண்டியை கொடுத்துவிட்டனர் ..
எனவே நண்பர்கள் வண்டியை புக் செய்யும்போது தெளிவாக சந்தேகம் இருந்தால் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் .. பிறகு  book செய்யவும்.. அது நம் உரிமை கூட.... நன்றி .. நாளை சந்திப்போம் ..